கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் திருப்பணிகள் தீவிரம்!
ADDED :3779 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சியில் உள்ள புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில், திருப்பதியின் ஏற்றம் கொண்டு தனிச்சிறப்பு பெற்றது. ஸ்ரீசக்கர விமானத்தில் பெருமாள் மூலஸ்தானம் அமைந்திருப்பது ஆகம விதிகளின் படி சிறப்பு பெற்றது. கோவிலில் உள்ள ஆண்டாள், தாயார், சக்கரத்தாழ்வார், ராமர், கண்ணன், ஆழ்வாராதிகள் ஆகிய தெய்வங்கள் கொண்ட ராஜகோபுரம் உள்ளிட்ட 9 கோபுர விமானங்களுக்கு பாலஸ்தானம் செய்து வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.