உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரேணுகாம்பிகை கோவில் தேரோட்டம்!

ஸ்ரீரேணுகாம்பிகை கோவில் தேரோட்டம்!

உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீரேணுகாம்பிகை  கோவிலில் தேரோட்டம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீரேணுகாம்பிகை  ÷ காவில் பிரம்மோற்சவ விழா கடந்த 24ம் தேதி துவங்கியது. மறுநாள் காமதேணு வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 26ம் தேதி இரவு அன்ன  வாகனத்தில் சுவாமி வீதியுலா மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து 28ம் தேதி முத்து பல்லக்கு திருவிழா நடந்தது. அதனை தொடர்ந்து  கலசாபிஷேகமும், மகா சண்டி ஹோமம், 308 சங்காபிஷேகம், ஊரணி பொங்கல், செடல் ஹோமம் நடந்தது. மாலை 6 மணிக்கு திருத்தேர் புறப்பாடு  நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !