உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா!

முத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா!

அவலூர்பேட்டை: எய்யில் மற்றும் வேட்டைக்காரன் பட்டி  கிராமங்களில் சாகை வார்த்தல் விழா நடந்தது. மேல்மலையனுõர் ஒன்றியம் எய்யில்  முத்து மாரியம்மன் கோவில் மற்றும் வேட்டைக்காரன் பட்டி மாரியம்மன் கோவிலில், நேற்று சாகை வார்த்தல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு  அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முன்னதாக பக்தர்கள் பூங்கரகம் எடுத்து ஊர்வலம் வந்தனர். சிறப்பு  அலங்காரத்தில் இரவு அம்மன் வீதி உலா நடந்தது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !