கொளஞ்சியப்பர் கோவிலில் வைகாசி விசாக யாக பூஜை!
ADDED :3775 days ago
விருத்தாசலம்: வைகாசி விசாகத்தையொட்டி, கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு யாக பூஜை நடந்தது. விருத்தாசலம், மணவாளநல்லூர் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் வைகாசி விசாக பூஜை, கடந்த 23ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிந்தது. இதையொட்டி, நேற்று காலை 11:30 மணிக்கு கோவில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, சித்தி விநாயகர், கொளஞ்சிய ப்பர் சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், வெள்ளிக் கவசத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு கொளஞ்சியப்பர் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.