ஸ்ரீராச்சத விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா!
ADDED :3910 days ago
சிவகங்கை: மடப்புரம் விலக்கில் உள்ள ஸ்ரீராச்சத விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா வரும் 5ம் தேதி நடக்கிறது. விழாவில் விநாயகருக்கு 21 அபிஷேக ஆராதனையும், பூஜை, அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை தங்கச்சாமி சுவாமி தலைமையில் கோயில் நலச் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.