உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் கன்னியம்மன் கோவிலில் வைகாசி விழா!

மயிலம் கன்னியம்மன் கோவிலில் வைகாசி விழா!

மயிலம்: மயிலத்தில்  பழங்குடி இருளர் மக்கள் சார்பில்  கன்னியம்மன் கோவில்  வைகாசி திருவிழா நடந்தது. மயிலத்தில்  வசிக்கும் இருளர் பழ ங்குடி மக்களின் குலதெய்வமான கன்னியம்மன் சுவாமிக்கு  வைகாசி திருவிழா நேற்று துவங்கியது. தினசரி அம்மனுக்கு வழிபாடு, தீபாராதனை  நடக்கிறது. முன்னதாக நேற்று காலை 7:00 மணிக்கு  மலையடிவாரத்திலுள்ள மயிலாடும் பாறை அருகே பழங்குடி மக்கள்,  பொங்கல் வைத்து  படையலிட்டனர். பின்னர்   பூங்கரம் ஜோடித்து  முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். பகல் 12:00 மணிக்கு  பச்சை பந்தலில் கன்னியம்மனுக்கு  படையலிட்டனர்.  பூங்கரகம் முக்கிய வீதிகள் வழியாக  வந்தவுடன்  மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. மாலை 4:00 மணிக்கு அம்மன்  வீதியுலா நடந்தது. . வரும் 4ம் தேதி  காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை நடக்கிறது.   இரவு 8:00 மணிக்கு கும்பம்  கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் காலை 10 :00 மணிக்கு சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவில் தந்தை பிரசாமுண்டா மக்கள்  சங்க மாநில தலைவர் ரவி, ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் உட்பட பழங்குடி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !