அபிடேக காலத்தில் செய்யப்படும் நிவேதனம்!
ADDED :3939 days ago
நறியதயி லாதியபி டேகதிர வியம்ஆட்டி
நவிலும்ஒவ் வொன்றி னிடையே
நம்புமுற் கோதனநி வேதனம் செயவேண்டும்
நாளு மதுபுரி யாவிடில்
பெறுமரிய சைவமுறை யோனாயுள் திடமொடு
பெருத்த வீரிய நாசமாம்
பிழையற உணர்ந்துதக மதுகவையின் உச்சியிற்
பீடுறும் சிருங்க வளவாய்
உறஇலிங் கத்தின்மீது ஈரிரண்டு அங்குலத்து
ஒக்க அபிடேக மெதுவாய்
உள்ளன்பொடு ஆட்டியே தேனுநிவே தனம்ஈதல்
உறும்எமக்கு என்று ரைத்தாய்
சிறுகண்இரு பெரியசெவி விகடதட மும்மதச்
சிந்து ரமுகன் தாதையே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.