தீப பூசா விதிகள்!
ADDED :3846 days ago
புனைதீப மேல்மலர் அளித்துடன் நிரீக்கண
புரோக்கணமும் ஆற்றி யதன்மேல்
போற்றும்ஐம் பிரமமே நியசித்துன் ஆகமம்
புகல்திக்கு பந்த னமுடன்
வினவுமவ குண்டனம் திரிசூல முத்திரை
விளங்கப் புரிந்தி தயநேர்
மேவியக ராஞ்சலி யுடன்சுளிக மந்திரம்
விளம்பியச் சுடர்வ கித்தே
நினதுமுகம் விழிநாசி கண்டமார்பு அடியினும்
நிறுத்தியொளிர் தார கம்போல்
நீடுபிர தட்சிணம் இலங்குமுகம் முறைபுரிதல்
நெறியென்று நீபு கன்றாய்
தினமும் இவ்வகை தீப முகமன்ஆ ராதனைசெய்
தில்லைமூ வாயிர வர்வாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.