குறுங்காலீசுவரர் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை!
ADDED :3777 days ago
கோயம்பேடு: கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோவில் குளத்தை சீரமைக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். கோயம்பேட்டில், மிகவும் பழமை வா ய்ந்த குறுங்காலீசுவரர் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு, விசேஷ நாட்களில், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், அங்குள்ள கோவில் குளம், தண்ணீர் இல்லாமல், பொலிவு இழந்து காணப்படுகிறது. இதுகுறித்து, பக்தர்கள் கூறுகையில், ‘மிகவும் பழமையான கோவில் குளத்தில், தண்ணீர் இல்லை. கோவில் குளத்தை துார்வாரி, ஆழப்படுத்த, கோவில் நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது, தண்ணீர் நிரம்பி, கோவில் குளம் பொலிவு பெறும்’ என்றனர்.