உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி விழா!

கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி விழா!

செஞ்சி: செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மனுக்கு வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்தனர். செஞ்சி கிருஷ்ணாபுரம்  மாரியம்மன், கிருஷ்ணகிரி கோட்டை பூவாத்தம்மன், ராஜகிரி கோட்டை செல்லியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் கடந்த 1ம் தேதி நடந்தது. இதை  முன்னிட்டு 48 நாள் மண்டலாபிஷேகம் நடந்து வருகிறது.  இதன் 33வது நாள் விழா மற்றும் வைகாசி மாத பவுர்ணமி பூஜை கடந்த 2ம் தேதி நடந்தது.  இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மகா தீபாராதனை நடந்தது. மாலை அன்னதானம் நடந்தது.  அன்னதானத்தை செஞ்சி மாஜிஸ்திரேட் வரலட்சுமி துவக்கி வைத்தார். தொடர்ந்து மகா தீபாராதனையும், பிரசாத விநியோகமும் நடந்தது. இதில்  உபயதாரர், விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !