உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிழாவிற்கு புதுப்பிக்கப்படும் மீஞ்சூர் பெருமாள் கோவில் தேர்!

திருவிழாவிற்கு புதுப்பிக்கப்படும் மீஞ்சூர் பெருமாள் கோவில் தேர்!

மீஞ்சூர்: மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்திற்காக, பழைய தேரினை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீஞ்சூர்,  பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. நாளை (5ம்தேதி), தேர் திருவிழா  நடைபெற உள்ளது. புதிய  தேர் திருப்பணிகள் முடிவடையாததால், தற்காலிகமாக பழைய தேரை இயக்க உள்ளனர். இதற்காக தேரினை புதுப்பிக்கும்  பணிகள் நடைபெற்று வருகின்றன. தேரின் சக்கரங்களை  கழற்றி, அதை சரி பார்த்து மீண்டும் பொருத்தும் பணிகளும், புதிய வண்ணம் தீட்டும்  பணிகளும் நடைபெற்று வருகின்றன. பழைய தேர் பழுதடைந்து உள்ளதால், அதை பாதுகாப்பாக இயக்குவதற்கு தேவையான நடைவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு திருவிழாவிற்குள், புதிய தேரினை தயார் செய்து, இயக்க வேண்டும் என, பக்தர்கள்  எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !