உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கனுார் திரவுபதியம்மன் தீமிதி விழா!

திருக்கனுார் திரவுபதியம்மன் தீமிதி விழா!

திருக்கனுார்: செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா  நடந்தது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு திரவுபதியம்மன், முத்து  மாரியம்மன் கோவிலில்,  தீமிதி விழா கடந்த 19ம் தேதி மாலை 6:00 மணிக்கு கொடியேற்றதுடன்   துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபி ஷேகம் மற்றும்   சுவாமி வீதியுலா நடந்தது.  கடந்த 26ம் தேதி காலை 10:00 மணிக்கு பகாசூரனுக்கு சாதம் எடுத்துச் செல்லுதல் நிகழ்ச்சியும், 29ம் தேதி  மதியம்  1:00 மணிக்கு மாரியம்மனுக்கு  சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம்  நடந்தது. தொடர்ந்து, 31ம் தேதி திரவுபதியம்மன், அர்ச்சுணன்  சுவாமி  திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று முன் தினம் காலை 10:00  மணிக்கு படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:00  மணிக்கு தீ மிதி விழா நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள்  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !