மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
3750 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
3750 days ago
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ராங்கியம், மிதிலைப்பட்டி சிவயோகபுரம் (மெட்டு) தர்ம சாஸ்தா கோயிலில் வரும் 7ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மணி 9.05க்கு மேல் தர்மசாஸ்தா மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகிறது. யாகசாலை பூஜை காலங்களில் வேத சிவகாம தேவார பாராயணங்கள் நடைபெறும். அன்று பகல் 12.30 மணி அளவில் கோதை சுப்பிரமணியன் திருமண மண்டபத்தில் அன்னதானம் நடைபெறும். அன்று இரவு 8.00 மணிக்கு தர்மசாஸ்தா திருவீதி உலா நடைபெறுகிறது.நிகழ்ச்சி நிரல்: (5.6.2015) காலை: 10.00 மணி - எஜமான அனுக்ஞை கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், கோபூஜை, நவக்கிரக ஹோமம், தீபாராதனைமாலை: 4.45 மணி - பூர்வாங்க பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், ரட்சாபந்தனம், கும்ப அலங்காரம், கடஸ்தாபனம், முதல் கால யாக பூஜை ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை பிரசாதம் வழங்கல்.(6.6.2015) காலை: 8.45 மணி இரண்டாம் கால யாக பூஜை பூர்ணாகுதி தீபாராதனைமாலை 6.30 மணி மூன்றாம் கால யாக பூஜை ஆரம்பம். பூர்ணாகுதி தீபாராதனை எந்திரஸ்தாபனம் மருந்து சாத்துதல்(7.6.2015) ஞாயிற்றுக்கிழமை காலை: 6.15 மணி நான்காம் கால யாக பூஜை ஸ்பர்சாகுதி, திரவியகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை.8.55 மணி கடம் புறப்பாடு9.05 மணி விமான மஹா கும்பாபிஷேகம் தீபாராதனை, மூலவர் கும்பாபிஷேகம் தொடர்ந்து மஹா அபிஷேகம் பிரசாதம் வழங்குதல்.சர்வசாதகம் சிவகாம ரத்னம், எம். சிவானந்த பட்டர், திருப்பரங்குன்றம்.ஆலய அமைப்பு:ஸ்தபதி ஆர்.எம்.ஆர். ரவிச்சந்திரன், மிதிலைப்பட்டிதொடர்புக்கு: எஸ்.பிஆர். சுப்பிரமணியன் செட்டியார் குடும்பத்தினர்எஸ்பி. செல்வக்குமார்- எஸ்பி. பழனியப்பன்எஸ்பி. பாலசுப்பிரமணியன்- எஸ்பி. செந்தில்வேல்ஸ்ரீமுருகன் டிராவல் ஏஜன்ஸி, மதுரை.
3750 days ago
3750 days ago