உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை!

நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை!

நாகப்பட்டினம்: நாகை, நீலாயதாட்சி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பௌர்ணமி விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காக ஜோதிர்லிங்க விளக்கு பூஜை நடந்தது. நாகை, நீலாயதாட்சி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 13 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் மாலை கோவிலில் அமைந்துள்ள பதினென் சித்தர்களில் ஒருவரான அழுகணி சித்தர் ஜீவ சமாதி பீடத்திற்கு முன், உலக சமாதானம்,இயற்கை சீற்றத்தில் இருந்து காப்பாற்றவும்,உலக குழந்தைகள் மற்றும் அனைவரின்  ஆரோக்கியம்,பள்ளி மற்றும் கல்லுõரி மாணவ,மாணவியரின் கல்வியில் வெற்றி, ஆலய வழிபாடுகளும்,பூஜைகளும் மேன்மேலும் சிறக்க வேண்டி,108 ஜோதிர்லிங்க விளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து அழுகணி சித்தர் ஜீவ சமாதிக்கு ருத்ரா அபிஷேகம்,தீபாரதனை நடந்தது.நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !