கல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3777 days ago
காஞ்சிபுரம் : மதுராந்தகம் அடுத்த மூசிவாக்கம் கிராமத்தில், கல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மூசிவாக்கம் கிராமத்தில் உள்ளது கல்லி அம்மன் கோவில்.இந்த கோவிலில், திருப்பணிகள் நடத்த கிராமவாசிகள் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த சில மாதங்களாக, இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.திருப்பணிகள் முடிவடைந்ததும், ஜூன் 4ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து, கடந்த 2ம் தேதி, கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின.நேற்று காலை, 10:00 மணிஅளவில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீர், கோவிலின் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை காண, மூசிவாக்கத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்திருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.