காகுப்பம் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED :3777 days ago
விழுப்புரம்: விழுப்புரம் காகுப்பம் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. விழுப்புரம் காகுப்பம் சலவைத்தொழிலாளர் குடியிருப்பிலுள்ள ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. விழாவையொட்டி கடந்த 1ம் தேதி குருபூஜையும், 2ம் தேதி கரிக்கோலமும், யாகசாலை பூஜைகளும் துவங்கின.நேற்று கோமாதா பூஜையும், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடந்தது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில், இன்று காலை 8:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.