உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளைவயல் காளி கோயிலில் பூச்சொரிதல் விழா நாளை ஆரம்பம்

பிள்ளைவயல் காளி கோயிலில் பூச்சொரிதல் விழா நாளை ஆரம்பம்

சிவகங்கை : சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நாளை காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. நகரின் காக்கும் தெய்வமான இக்கோயிலில், ஆனி திருவிழாவை முன்னிட்டு பத்து நாட்கள் பூச்சொரிதல் விழா நடக்கும். நாளை காலை 9.15 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது. அம்மனுக்கு அலங்காரம், நெய்வேத்தியம் நடைபெறும். அன்று மாலை 4.45 மணிக்கு கரகம் எடுத்தல், மாலை 6 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜூலை 13 அன்று மாலை 6 மணிக்கு லட்சார்ச்சனை, ஜூலை 15 அன்று காலை 10.30 மணிக்கு பாலாபிஷேகம், மாலை 4 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரம், இரவு பூச்சொரிதலையொட்டி மாலை முதல் இரவு வரை பக்தர்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்து, அபிஷேகம் செய்வர். பக்தர்கள் பொங்கல், மாவிளக்கு வைத்தல், பிள்ளை தொட்டி கட்டி நேர்த்தி செலுத்துவர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். இத்திருவிழாவை முன்னிட்டு நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். கோயில் செயல் அலுவலர் ஜெகநாதன், பூசாரி பூமிநாதன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !