மேல்மலையனூர் கோவிலில் ரூ.17லட்சம் உண்டியல் வசூல்!
ADDED :5244 days ago
அவலூர்பேட்டை : மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 17.48 லட்சம் ரூபாய் உண்டியல் வசூலானது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உண்டியல் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையாளர்கள் விழுப்புரம் ரகுநாதன், மேல் மலையனூர் குமரதுரை முன்னிலை வகித்தனர். உண்டியலில் 17 லட்சத்து 48 ஆயிரத்து 762 ரூபாய் ரொக்கமும், 121 கிராம் தங்க நகைகளும், 155 கிராம் வெள்ளி நகைகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஆய் வாளர் முருகேசன், மேலா ளர் முனியப்பன் , அறங்காவலர் குழு தலைவர் துரை, அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.