உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெருங்கினால் நெருங்குவான்!

நெருங்கினால் நெருங்குவான்!

அல்லாஹ் தன்னிடம் கூறிய சில விஷயங்களை சொல்கிறார் நபிகள் நாயகம்... கேளுங்கள். எவன் என்னிடம்ஒரு ஜாண் நெருங்கிவருகின்றானோ, அவனிடம் நான் ஒரு முழம் நெருங்கி வருகின்றேன். என்னிடம் ஒரு முழம் நெருங்கி வருபவனைநான் இரண்டு முழம்நெருங்குகின்றேன். எவன் என்னிடம் நடந்து வருகின்றானோ அவனை நோக்கி நான் ஓடிவருகின்றேன். என்னை அழைப்பவர்எவரேனுமுண்டா... அவருக்கு நான் பதில் கூறுகின்றேன். என்னிடம் கேட்பவர்எவரேனுமுண்டா... அவருக்கு நான் வாரி வழங்குகின்றேன். என்னிடம் மன்னிப்பு வேண்டுபவர்எவரேனுமுண்டா... அவரை நான் மன்னிக்கின்றேன். அல்லாஹ்விடம் எதையேனும் கேட்க விரும்புபவர்கள்அதிகாலைப் பொழுதில் கேட்க வேண்டும். ஏனெனில்,இரவுக்காலத்தை மூன்றாகப் பிரித்து அதில் இரண்டு பங்கு கழிந்த பின், மூன்றாம் பங்கு துவங்கியவுடன் அல்லாஹ், முதல் வானத்தின் மீது இறங்கி வந்து தன் அடியார்களை அழைத்துச்செல்கிறான். இதன் மூலம் அதிகாலையில் விழிக்க வேண்டும்என்பதும், இறைவனைத் தொழவேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !