காலசம்ஹரா பைரவ மூர்த்திக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED :3875 days ago
ஆனைமலை: அங்கலக்குறிச்சி கோபால்சாமி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள காலசம்ஹரா பைரவ மூர்த்திக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஆனைமலை அருகே உள்ள அங்கலகுறிச்சி கோபால்சாமி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கால சம்ஹார மூர்த்தி பைரவர் கோவில். தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இங்கு பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. பைரவருக்கு பால் சந்தனம், இளநீர், திருமஞ்சனம், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிேஷகம் மற்றும் தீப ஆராதனைகள் நடந்தன.காலை 11.30க்கு நடந்த சிறப்பு பூஜையில், பக்தர்கள் வெண் பூசணியில் விளக்கேற்றி வழிப்பட்டனர். மாலை 4.30 மணிக்கு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் எலுமிச்சை தீபமேற்றி வழிப்பட்டனர்.