உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் உழவார பணி

திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் உழவார பணி

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், அபாகஸ் இன்டர்நேஷனல் மான்டிசோரி பள்ளி மாணவ மாணவியர், நேற்று உழவார பணி மேற்கொண்டனர். பள்ளியின் சாரண, சாரணியர் மற்றும் மாணவ, மாணவியர், பெருமாள் கோவில் வளாக பகுதி முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டனர். தெப்பக்குளம், வெளி மற்றும் உள்ள பிரகார சன்னதிகள், ஆஞ்சநேயர் கோவில் பகுதி, சொர்க்கவாசல் பகுதி, தெற்கு வாசல் உள்ளிட்ட பகுதி முழுவதும் தூய்மை செய்தனர். பள்ளி முதல்வர் சிவசதீஷ், சாரண இயக்க ஆசிரியர் மணிவேல் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !