கங்கையம்மன் கோவில் திருவிழா
ADDED :3779 days ago
ஆர்.கே.பேட்டை: பத்மாபுரம் கிராமத்தில், நேற்று, கங்கையம்மன் கோவில் திருவிழா நடந்தது. அம்மன் வீதியுலா எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆர்.கே.பேட்டை அடுத்த, பத்மாபுரம் கிராமத்தில், நேற்று, கங்கையம்மன் திருவிழா நடந்தது. கிராமத்தின் வடக்கில் அமைந்துள்ள கோவிலில், காலை, 10:00 மணிக்கு, அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திருவிழாவை ஒட்டி, கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட அம்மன் வீதியுலா எழுந்தருளினார். இதேபோல், வங்கனூர் காலனியிலும் நேற்று, கங்கையம்மன் திருவிழா நடந்தது.