உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் முருகனுக்கு 190 கிராம் தங்க டாலர் செயின்!

திருச்செந்தூர் முருகனுக்கு 190 கிராம் தங்க டாலர் செயின்!

தூத்துக்குடி:திருச்செந்தூர் முருகனுக்கு 190 கிராம் தங்க டாலர் செயினை லண்டனை சேர்ந்த முருகபக்தர் ராஜ்குமார் வழங்கினார். மதுரையை சேர்ந்தவர் ராஜ்குமார், இவரது மனைவி ராஜூவி இவர்கள் தற்போது குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகின்றனர். சிறிய அளவில் ஜவுளி தொழில் செய்து வந்தனர். தற்போது தொழில் வளர்ச்சி ஏற்பட்டு லண்டனில் இருந்து வெளி நாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளனர். முருகபக்தரான ராஜ்குமார் நேற்று திருச்செந்தூர் மூலவர் சுப்ரமணியருக்கு 190 கிராம் எடையுள்ள டாலர் தங்க செயினை காணிக்கையாக வழங்கினார். இதனை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் பொன் சுவாமிநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதன் மதிப்பு 5.50 லட்சம் ரூபாய் ஆகும், என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !