திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்!
ADDED :3770 days ago
நெட்டப்பாக்கம்: ஏரிப்பாக்கம் கிராமத்தில் பார்த்திபன், திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.ஏரிப்பாக்கம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள், சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு பார்த்திபன், திரவுபதிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நாளை மாலை 5:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை ஏரிப்பாக்கம் கிராம மக்கள் செய்திருந்தனர்.