உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆங்கிலேய கலெக்டரின் மண்டை ஓட்டுடன் பூஜை!

ஆங்கிலேய கலெக்டரின் மண்டை ஓட்டுடன் பூஜை!

திருநெல்வேலி: நெல்லை கங்கைகொண்டான் அருகே கோயிலில் ரத்தக்குளியல் நடந்தது.திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதியில் சிற்றாற்று கரையில் காலங்கரையான் கோயில் உள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்த பகுதிக்கு வந்த கலெக்டர் ஒருவர், இங்கிருந்த தெய்வத்தை பழித்து துப்பாக்கியால் சுட்டாராம். இதில் ஆத்திரமுற்ற சாமி, அந்த கலெக்டரை பழிவாங்கியதோடு அவரது மண்டை ஓட்டை புதைத்து வைத்தார். இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் கொடை விழா நடத்தப்படுகிறது. மற்ற கோயில்களில் இல்லாதபடி கோயில் முன்பாக ஐந்து அடி ஆழத்தில் பள்ளம் போல தோண்டினர். அதில் 67 ஆடுகளை வெட்டி பழிகொடுத்து ரத்தத்தை கொட்டி குளம் போல காட்சியளித்தது. இதில் தலைமை சாமியாடி, ரத்தக்குளியல் நடத்தினார். பின்னர் அங்குள்ள ஆங்கிலேய கலெக்டரின் மண்டையோட்டில், தினைமாவு பிசைந்து உண்டார். நேற்றுமுன்தினம் இரவு துவங்கி நேற்று காலை வரையிலும் விடிய விடிய கொடை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !