திருச்செந்தூர் முருகன் கோயிலில் வாய்பேச முடியாதவர்களுக்கு சிறப்பு வழிபாடு துவக்கம்!
திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயிலில் வாய் பேச முடியாதவர்கள் மற்றும் பேசும் திறன் குறைவானவர்களுக்கு முருகன் சன்னதியில் சிறப்பு வழிபாடு திட்டத்தினை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது, திருச்செந்தூர் முருகன் கோயில் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாகும். மேலும் இங்கு குருபரிகார பூஜை, சத்ரு சம்ஹார பூஜை போன்ற பூஜைகள் பக்தர்கள் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது சூரசம்ஹாரம் ரியலாக நடந்த இடம் திருச்செந்தூர் ஆகும். கிபி 11ம் நூற்றாண்டில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கிராமத்தில் சண்முகசிகாமணி-சிவகாமசுந்தரி தம்பதிகளின் ஒரே மகனாக பிறந்தார் குமரகுருபரன். இவருக்கு 5 வயது வரையில் பேசும் சக்தியில்லை. அதனால் பெற்றோர் தனது மகனை (குமரகுருபரனை) அழைத்து திருச்செந்தூர் கோயில் வந்து 48 நாள்கள் பேசும் சக்தி தர வேண்டி விரதம் இருந்தனர். 48 நாட்கள் கழித்தும் பேசும் திறன் வராத காரணத்தால் நம்பிக்கை இழந்து தற்கொலை செய்ய முடிவு செய்தனர். பின் வதன ஆரம்பத்துறை என்னும் அழகான கடற்பகுதிக்கு வந்து தற்கொலை முடிவெடுக்கும் தருணத்தில் எம்பெருமான் முருகன் அர்ச்சகர் வடிவில் அவர் முன் தோன்றி அவர்களிடம் நீங்கள் யார்? என்ன என்பது பற்றிய விபரம் கேட்கிறார். விபரம் அறிந்ததும் அவர் அந்த பாலகனிடம் (குமரகுருபரன்) ஒரு பூவை கொடுக்கிறார். பின் இது என்ன என்று கேட்கிறார். அவர் பூ என்று வாய் பேச ஆரம்பித்து அவனருளால் பூமேவு செங்கமலப் புத்தேளும் என அவன் புகழ் பாடு கந்தர் கலிவெண்பா பாடினார்.
11ம் நூற்றாண்டில் நடந்த வரலாறு இது. ஆகவே திருச்செந்தூர் கோயிலில் பேசும் திறமை குறைவுள்ளவர்களின் வேண்டுகோளாக திருச்செந்திலாண்டவனுக்கு சமர்பிக்க இந்த சிறப்பு வழிபாடு துவக்கப்பட்டுள்ளது. இனி திருச்செந்தூர் முருகன் கோயிலில் பேசும் திறன் குறையுள்ளோர் தம்டென் உதவியாளரைக் கூட்டிக் கொண்டு சண்முக விலாசத்தில் உள்ள தகவல் நிலையம் வழியாக உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வரவேண்டும். பின்னர் ரூ.2 க்கு அஷ்போத்திர அர்ச்சனைக்கு உரிய டிக்கெட் பெற்று கோயிலில் திருமறை ஓதுவார் மூர்த்தியுடன் மூலவர் சன்னதிக்கு அழைத்து செல்லப்பட்டு ம ணியடி தரிசனத்தில் இலவசமாக அமரவைத்து மூலவருக் கு அர்ச்சனை போத்திமலர் து õவ, திரிசுதந்திரர் மந்திரம் ஓத கோயில் உபயமாக கோயில் ஓதுவார்மூர்த்தி பேசாதிருந்து முருகன் அருளால் பேசி, பாடிய குமரகுருபரர் அருளிய கந்தர் கலிவெண்பாவில் உள்ள பாடல்கள் பாடி இறைவனை வேண்டுவார்கள். அர்ச்சனை முடிந்ததும் இலைவிபூதி பிரசாதமும், பூவும், தீர்த்தமும் பிரசாதமாக போத்தி பேசும் திறன் குறைந்தவரிடம் வழங்குவர். பேசாதிருந்த குமரகுருபரருக்கு பேசும் சக்தியை அளித்த செந்தில் ஆண்டவரிடம் பேசும் திறன் குறைந்தோர் வேண்டுதலை இத்திருக்கோயிலில் சமர்ப்பித்திட திருக்கோயில் மூலம் செய்யப்படும் சிறப்பு சேவையினை பேசும் திறன் குறை உள்ள பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறோம். தி னசரி பக்தர்கள் வந்து பயன் அடையலாம். பேசும் திறன் இல்லாதவர்களுடன் இரண் டு நபர் தரிசனத்துக்கு இலவசமாக அனுமதிக்கப்படுவர். மே ற்கண்டவாறு கோயில் இø ண ஆணையர் பாஸ்கரன் கூறினார். முன்னதாக முருகன் சன்னதி முன்பு ஓதுவார் மூர்த்திகள் கந்தர்கலிவெ ண் பா பாடல்களை பாடி திரிசுதந்திரர்கள் மந்திரம் ஓத போத்தி அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கினார். இந்நிகழ்ச்சியி ல் உள்துறை மேலாளர் சுப்பிரமணியன், உள்துறை சூப்பிரடென்ட் ராஜேந்திரன், சிவா, ஐந்து கோடி அரிகரன், கிட்டு போத்தி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.