பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறையை திறக்க தடை!
புதுடில்லி : கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் 6வது ரகசிய அறையை திறக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை ரகசிய அறையை திறக்கக்கூடாது எனவும் கோவில் நகைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை தரும்படி கேரள மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளது.
கோவிலை சுற்றி சிறப்பு பாதுகாப்பு: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலைசுற்றி, 500 மீட்டர் சுற்றளவுக்குசிறப்பு பாதுகாப்புமண்டலமாக்க, மாநிலபோலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், புகழ்பெற்ற பத்மநாப சுவாமிகோவில் உள்ளது.இதை, திருவிதாங்கூர்மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். இக்கோவிலில், பாதாள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்க,வைர, வெள்ளிப் பொருட்கள் குறித்து, கணக்கெடுத்து அறிக்கையளிக்க,சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. கடந்த, 27ம் தேதிமுதல், பாதாள அறைகளை திறந்து கணக்கெடுத்துவருகின்றனர். 5அறைகளை திறந்து, அங்கிருந்த பொருட்களை கணக்கெடுத்து வரும் அந்தகமிட்டியால், 6வது (பிஅறை) அறையை திறக்கமுடியவில்லை. இந்தஅறையை இன்று திறக்கதிட்டமிடப்பட்டுள்ளது.பாதாள அறைகளில்,விலை மதிக்க முடியாதபொருட்கள் உள்ளதால்,சிறப்பு பயிற்சி பெற்ற, 24பேர் கொண்ட கமாண்டோக்கள், அதிவிரைவுபடையைச் சேர்ந்த, 24பேர் என, 48 பேர்கொண்ட குழு, கோவில்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. கமாண்டோக்கள் தவிர,நகர போலீஸ் துறையைச்சேர்ந்த, 160 போலீசாரும் கோவிலுக்கு உள்ளேயும்,வெளியேயும் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவர்களை தவிர,கோவிலைச் சுற்றிலும்,50க்கும் மேற்பட்ட போலீசார், மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கேரள டி.ஜி.பி.,ஜேக்கப் புன்னோஸ் தலைமையில் போலீஸ் அதிகாரிகள்நேற்று ஆலோசனை நடத்தினர்.கோவிலின் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும்,கோவிலை சுற்றி, 500 மீ.,சுற்றளவுக்கு சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வருங்காலங்களில், கோவிலில் நிரந்தரமாக பாதுகாப்பு குறித்து, மாநில போலீசார், உள்துறைஅமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.