உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆழ்வார்குறிச்சி கோயிலில் அரசு-வேம்பு திருக்கல்யாணம்!

ஆழ்வார்குறிச்சி கோயிலில் அரசு-வேம்பு திருக்கல்யாணம்!

ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சி வரம்தரும் விநாயகர் கோயிலில் அரசு-வேம்பு திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஆழ்வார்குறிச்சியில் அம்பாசமுத்திரம்-தென்காசி மெயின்ரோட்டில் தெப்பகுளம் அருகே வரம்தரும் விநாயகர் கோயில் உள்ளது. இங்கு துதிக்கை இல்லா விநாயகர் எழுந்தருளியுள்ளார். மேலும் இக்கோயிலில் பாலதுர்க்கை, நாகர், நவக்கிரகங்கள், முருகன் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலில் நேற்று புதியதாக நாகர் சிலை பிரதிஷ்டை செய்து அரசுக்கும் வேம்பிற்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது. முன்னதாக சந்தி விநாயகர் கோயில் முன்பிருந்து சீர்வரிசையை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். காலை 7.40 மணிக்கு வருஷாபிஷேகத்திற்கான சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடந்தது. சிவகிரி காமேஸ்வரன் பட்டர் சுரேஷ், கோயில் அர்ச்சகர் ஆண்டபெருமாள் ஆகியோர் வேணுகோபால் அய்யர் தலைமையில் வேதபாராயணம், சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடத்தினர். பின்னர் செல்லப்பாண்டியன், மத்தியாபிள்ளை தலைமையில் அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி.முத்துசங்கரலிங்கம் முன்னிலையில் அரசு-வேம்பு திருமணம் நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை, விசேஷ பூஜைகள், தர்ம ஆதீன வளாகத்தில் அன்னதானம், இரவு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை வரம்தரும் விநாயகர் கோயில் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !