உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடும்பன் கோயிலில் அடிப்படை வசதிகள்: பணிகள் துரிதம்

இடும்பன் கோயிலில் அடிப்படை வசதிகள்: பணிகள் துரிதம்

பழநி : பழநி இடும்பன் கோயிலில் 64.5 லட்ச ரூபாயில் பெண்கள் உடை மாற்றும் அறை, சிறுவர் பூங்கா பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திர விழா காலங்களில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும். பக்தர்கள், இடும்பன் கோயிலுக்குச் சென்று, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வருவர். மார்கழி முதல் வைகாசி வரை, இடும்பன் கோயிலில் கூட்டம் அதிகரிக்கும். அப்போது மட்டுமே கூடுதல் விளக்குகள், பந்தல் என, தற்காலிக வசதிகள் செய்யப்படும். பிற நேரங்களில், இடும்பன் குளத்தில் உடை மாற்றவோ, கழிவறை வசதிகளோ இருக்காது. இந்நிலையில் சுற்றுலா வளர்ச்சி நிதி, கோயில் நிர்வாகத்தின் மூலம் 64.5 லட்ச ரூபாயில் நிரந்தர வசதிகளுக்கான பணிகள், ஐந்து மாதங்களுக்கு முன் துவங்கின. இவை இம்மாத இறுதியில் முடியும். செயல் அலுவலர் சுந்தரேசன் கூறுகையில், ""தலா 11 லட்சத்தில் உடை மாற்றும் அறை, சிறுவர் பூங்கா, 10.5 லட்சத்தில் கழிவறைகள் அமைக்கப்படுகின்றன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !