உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் தேர்த்திருவிழாவில் பக்தர்கள் குவிந்தனர்!

மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் தேர்த்திருவிழாவில் பக்தர்கள் குவிந்தனர்!

சின்னசேலம்: மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் தேர் திருவிழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் கோவில் நூற்றாண்டு பெருமை வாய்ந்ததாகும். புனித அந்தோணியார் கோவில் தேர் திருவிழாவை, கடந்த 5ம் தேதி ஆயர் சிங்கராயன் கொடியேற்றி துவக்கி வைத்தார். நாள்தோறும் திருப்பலி பூஜை, குணமலிக்கும் வழிபாடு, தேர்பவனி மற்றும் சொற்பொழிவுகள் நடந்தது.

இதில் ஆயர் அந்தோணி ஆனந்தராயர், பாதிரியாளர்கள் சவரிமுத்து, லூர்து ஜெயசீலன் , சகாயராஜ், ஆரோக்கியசாமி, அற்புதராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு வானவேடிக்கையுடன் சின்ன தேர்பவனி மற்றும் பெரிய தேர்பவனி நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று மேல்நாரியப்பனூர் திருத்தல பாதிரியார் பால்ராஜ் கொடியிறக்கம் செய்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !