உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுந்தரேசுவரர் கோவிலில் பிரம்மோற்சவ பெருவிழா!

சவுந்தரேசுவரர் கோவிலில் பிரம்மோற்சவ பெருவிழா!

சைதாப்பேட்டை: சைதாப்பேட்டை சவுந்தரேசுவரர் கோவிலில், பிரம்மோற்சவ பெருவிழா,
கொடியேற்றுத்துடன் இன்று துவங்குகிறது.

சைதாப்பேட்டை பிராமணர் தெருவில் உள்ள, திரிபுரசுந்தரி உடனுறை சவுந்தரேசுவரர் கோவிலில், இன்று முதல், 26ம் தேதி வரை, 2015ம் ஆண்டு, ஆனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா நடைபெறுகிறது. இன்று காலை 6:00 முதல் 7:00 மணிக்குள், சவுந்தரேசுவரப் பெருமானுக்கு துவஜாரோகணம் செய்து, பிரம்மோற்சவ பெருவிழா துவங்கும். 17ம் தேதி, காலை 6:00 மணிக்கு, அதிகார நந்தி சேவை, இரவு 8:00 மணிக்கு, பூத வாகனம் நடைபெறும். 19ம் தேதி, காலை 7:30மணிக்கு, சிவிகை உற்சவம், இரவு 10:00 மணிக்கு, ரிஷப வாகனம் நடைபெறும்.

வரும் 21ம் தேதி, காலை 6:00 முதல் 7:00 மணிக்குள், திருத்தேர் உற்சவம், இரவு 9:00 மணிக்கு,
திருக்கோவிலுக்கு எழுந்தருளல், புஷ்ப விமானம் நடைபெறும். 24ம் தேதி, காலை 7:00 மணிக்கு, நடராஜர் உற்சவமும், தொடர்ந்து, பஞ்சமூர்த்தி உற்சவமும் நடைபெறும். மாலை 6:30 மணி முதல், திருக்கல்யாண உற்சவம், திருக்கைலாய வாகனம், துவஜ அவரோகணம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறும். இறுதியாக, 26ம் தேதி, இரவு 9:00 மணிக்கு, ஏகாந்த சேவையுடன் நிகழ்ச்சிகள் முடிவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !