உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குவ்வம்மாள் கோவில் கும்பாபிஷேகம்!

குவ்வம்மாள் கோவில் கும்பாபிஷேகம்!

உடுமலை : கொழுமம், குவ்வம்மாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. மடத்துக்குளம்,
கொழுமத்தில் குவ்வம்மாள் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேகம விழா, ஜூன்
11ம் தேதி காலை, 7:30 மணிக்கு, கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. அன்று மாலை, தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, விநாயகர் பூஜை, கும்பலங்காரமும், இரவு, 8:00 மணிக்கு, முதற்கால யாக பூஜை, 108 மூலிகைப் பொருட்களால் ேஹாமமும், இரவு, 11:30
மணிக்கு, யந்திர பூஜையும் நடந்தன.கடந்த ௧௨ம் தேதி அதிகாலை, 4:30 மணிக்கு, இரண்டாம்
கால யாக பூஜையும், கணபதி ேஹாமமும், காலை, 5:00 மணிக்கு விமானத்துக்கும், காலை, 5:45
மணிக்கு, சுவாமிக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !