செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!
செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
செஞ்சி காமாட்சியம்மன் உடனுரை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், நேற்று காலை
ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 3:00 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தார்.
பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.
அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜலாம்பாள் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு சாமி கோவில் உலா நடந்தது. திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாத விநியோகம் நடந்தது.
முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில், முக்குன்ற நாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு
சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மகா தீபாராதனையும், சாமி கோவில் உலாவும்
நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. உபயதாரர் நல்லதம்பி, நிர்வாகிகள்
பச்சைவண்ணன் செல்லக்குட்டி, பழனி, சண்முகம், நாராயணசாமி உட்பட பலர் கலந்து
கொண்டனர்.
மேலச்சேரி பிரகன்நாயகி உடனுறை மத்தளேஸ்வரர் குடைவரை கோவிலில் பிரதோஷத்தை
முன்னிட்டு மத்தளேஸ்வரர், பிரகன்நாயகி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மகா தீபாராதனையும், பிரசாத விநியோகமும் நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி
வழிபட்டனர். பூஜைகளை சிவநாதன் குருக்கள் செய்தார்.