மண்டலாபிஷேக பூஜை வரும் 18ம் தேதி நிறைவு!
ADDED :3773 days ago
சென்னிமலை: சென்னிமலை அடுத்த முருங்கத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ள பழமையான சிவன் கோவிலாக கருதப்படும் பிரம்ம லிங்கேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மண்டலா பூஜை நடந்து வருகிறது.
வரும், 18ம் தேதி மண்ட பூஜை நிறைவு விழா மற்றும், 108 சங்காபிஷேக பெருவிழா காலை,
5.30 மணிக்கு நடக்கிறது. முன்னதாக, தீர்த்த ஊர்வலம், காலை, 7.30 மணிக்கு மங்கள இசை,
விநாயகர் வழிபாடு, வருணா பூஜை, வேதிகா அர்ச்சனை, 108 சங்கு பூஜை, யாக பூஜை,
தீபாராதனை நடக்கிறது. பின், வடிவுள்ள மங்கை உடனமர், பிரம்மலிங்கேஸ்வர சுவாமிக்கு மஹா அபிஷேம், 108 சங்காபிஷேகம், விசேஷ அலங்காரத்தில் மஹா தீபாராதனை நடக்கிறது. பூஜைகளை அமிர்தலிங்க சிவாச்சாரியார், கோபி பிரபாகரசிவம் ஆகியோர் தலைமையில்
சிவாச்சாரியார்கள் செய்கின்றனர். அன்று முழுவதும் அன்னதானம் நடக்கிறது.