பெருமாள் கோவிலில் அலங்கார திருமஞ்சனம்!
ADDED :3960 days ago
நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மூலவர் அலங்கார திருமஞ்சனம் நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பம் கிராமத்தில் உள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் திருவேங்கமுடையான், மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம் காலை 8.00 மணிக்கு நடந்தது. இதனையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்து, சுவாமி வீதியுலா நடந்தது.