கரடிகுப்பத்தில் கும்பாபிஷேகம்!
ADDED :4133 days ago
அவலூர்பேட்டை: கரடிக்குப்பம் செல்வ விநாயகர் மற்றும் திரவுபதி அம்மன் கோவில்களுக்கு கும்பாபிஷேக நடந்தது.
மேல்மலையனூர் ஒன்றியம், கரடிக்குப்பம் கிராமத்தில் செல்வ விநாயகர் மற்றும் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன் தினம் (14 ம்தேதி) காலையில் கணபதி ஹோமம், அனுக்ஞை, பிரவேச பலியும், இரவு 8 :00 மணிக்கு முதற்கால யாகசாலைபிரவேசம், மகா வேள்வி பூஜை ஹோமமும், யாகசாலை பிரவேசமும் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலை 4:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 5:30 மணிக்கு நாடி சந்தானமும், 6:50 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. இதில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.