சோளீஸ்வரர் கோவிலில் 2016ல் கும்பாபிஷேகம்!
ADDED :3895 days ago
வெள்ளக்கோவில்:வெள்ளக்கோவில் சோளீஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை, 2016, மார்ச் 18ல் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.வெள்ளக்கோவில் சோளீஸ்வர சுவாமி திருப்பணி கமிட்டி தலைவர் முத்துக்குமார் தலைமையில், துணை தலைவர் ராஜலிங்கம், அறநிலையத்துறை செயல் அலுவலர் நாகராஜ் முன்னிலையில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், கோவில் திருப்பணிகள், கடந்த எட்டு ஆண்டாக நடைபெற்று வருகின்றன.
ஸ்தபதி சீனிவாசன் தலைமையில், தற்போது கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடக்கிறது.திருப்பணி குழுவினர், கோவில் பணிகளை ஆய்வு செய்தனர். அதன்பின் நடந்த கூட்டத்தில், 2016, மார்ச், 18ல், காலை, 9:30 முதல், 10:30 மணிக்குள், கும்பாபிஷேகம் நடத்துவது என, முடிவெடுக்கப்பட்டது.