சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம்!
ADDED :3961 days ago
புதுச்சேரி:சாரதாம்பாள் கோவிலில், கிருஷ்ண துவாரகா லீலைகள் உபன்யாச நிகழ்ச்சி நடந்தது.
எல்லப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் கிருஷ்ண ப்ரேமிக பஜனை மண்டலி சார்பில் கிருஷ்ண துவாரகா லீலைகள் உபன்யாச நிகழ்ச்சி நேற்று துவங்கியது. மாலை 6:30 மணிக்கு நாம சங்கீர்த்தனத்துடன் துவங்கிய உபன்யாசத்தில் பரனுார் கிருஷ்ண ப்ரேமி சுவாமிகளின் குமாரர் ஹரி அண்ணா, ருக்மணி கல்யாணம் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.
வரும் 20ம் தேதி வரை தினமும் மாலை 7.00 மணி முதல் 9.00 வரை பல்வேறு தலைப்புகளில் உபன்யாசம் நடக்கிறது. 21ம் தேதி காலை 8:30 மணிக்கு ராதா கல்யாண மகா உற்சவம், இரவு 7:00 மணிக்கு பாண்டுரங்க லீலைகள்-சங்கீத உபன்யாசம் நடக்கிறது.