உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவிலில் ரூ.1 கோடியை தாண்டியது உண்டியல் காணிக்கை!

அழகர்கோவிலில் ரூ.1 கோடியை தாண்டியது உண்டியல் காணிக்கை!

அழகர்கோவில்: பெருமாள் கோவில்களின் உண்டியல் காணிக்கை, ஒரு கோடி ரூபாயை
தாண்டியுள்ளது.

மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில், தல்லாகுளம் பெருமாள் கோவில்களின் நிரந்தர உண்டியல் பெட்டிகள் மற்றும் சித்திரை திருவிழா உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.அதில், ரொக்கம் ஒரு கோடியே ஆறு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் இருந்தது. இதுதவிர வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியல்களில் இருந்தன. தங்கம் 110 கிராமும், வெள்ளி, 405 கிராமும் கிடைத்தன. அழகர் ஆற்றில் இறங்கி, 45 நாட்களுக்கு பின் இந்த உண்டியல் பெட்டிகள் திறந்து எண்ணப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !