தேவிபட்டினம் தேர்பவனி விழா!
ADDED :3776 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் ஆர்.சி.தெருவில் உள்ள புனித சவேரியார் ஆலய தேர்பவனி விழா கடந்த ஜூன் 10 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன்பிறகு தினமும் சிறப்பு வழிபாடுகளும்,
திருப்பலியும் நடந்தன. விழாவின் கடைசி நாளான நேற்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது.
மாலையில் நடந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் சவேரியார் வீதி உலா வந்தார். சுற்றுப்புற
பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆர்.சி.தெரு கிறிஸ்தவர்கள்
செய்திருந்தனர்.