கிறிஸ்தவ ஆலயத்தில் தங்க கிரீடம் கொள்ளை!
ADDED :3867 days ago
நாகர்கோவில்: அஞ்சுகிராமம் அருகே மைலாடியில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது.
நேற்று முன்தினம் மாலை ஆலயத்தில் பிரார்த்தனை முடிந்த பின்னர் ஊழியர்கள் ஆலயத்தை
பூட்டி சென்றனர். நேற்று காலை பார்த்த போது ஆலயத்தின் ஜன்னல் கம்பிகள்
உடைக்கப்பட்டிருந்தது. பீரோக்களும் உடைக்கப்பட்டு மாதா சொரூபத்தில் வைக்கும் ஆறு பவுன் எடை கொண்ட தங்க கிரீடங்கள் உட்பட ஏழரை பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
மேலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணமும் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.