உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

சின்னமனூர்: சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி மேலப்பட்டியை சேர்ந்த குரும்பர் சமுதாய மக்கள் மகாலட்சுமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். தேனி மாவட்டத்தை சேர்ந்த 53 கிராம மக்கள் உட்பட மாநிலம் முழுவதுமிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முக்கிய நிகழ்வாக 25 பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பூஜாரி பழனிச்சாமி விரதமிருந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்தார். பூஜாரி கூறுகையில், ""நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கிறோம். இதுவரை யாருக்கும் தலையில் காயம் ஏற்பட்டதில்லை. இதற்காக கடுமையான விரதம் மேற்கொள்ளப்படுகிறது. நினைத்தது நடந்தால் தலையில் தேங்காய் உடைப்பது எங்கள் சமுதாய பழக்கம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !