சோம சூத்திர வலம்
ADDED :3793 days ago
விடையினின் றிடமாய் அடைந்துசண் டீசரிடம்
மேவி யவ்வழி திரும்பி
விடைகண்டு வலமாய் அடைந்துகோ முகைகண்டு
மேவ வழியே மீண்டுபின்
தொடரும்விடை கண்டுசண் டேசனைச் சார்ந்துமேல்
தூயகோ முகைய டைந்து
சொற்பெருகு சண்டே சனைக்கண்டு விடைகொண்டு
தொழுதுபிர தோட காலத்(து)
அடைவினில் ஒருவலம் அனந்தபிர தட்சணம்
அடிக்கொ ரயமே தப்பயன்
அபசவ்வி யம்சவ் வியாபசவ் வியவலமொடு
அணிசவ்வி யம்புரி தல்நல்
திடமருவும் எதிகள்இல் லறநடையர் அன்னியர்
தினம்புரிய முறைமை என்றாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.