உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முகாசபரூர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்!

முகாசபரூர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்!

மங்கலம்பேட்டை: முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று நடந்த சிறப்பு திருமஞ்சனத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ம  ங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில், திருப்பதி தேவஸ்தானம், ஹிந்து தர்ம பரிஷத் சார்பில் கடந்த 23ம் தேதி முதல்   ஆன்மிக நிகழ்ச்சிகள் துவங்கி நடந்து வருகிறது. அதில், நேற்று முன்தினம் (24ம் தேதி) காலை 7:30 மணிக்கு திருமஞ்சனம், காலை 10:00 மணிக்கு   விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், இரவு 7:00 மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று (25ம் தேதி) காலை 8:30 மணிக்கு சிறப்பு திரு  மஞ்சனம், மாலை 7:00 மணிக்கு பஜனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !