உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பத்தாழ்வார் பஜனை மடத்தில் மண்டலாபிஷேக நிறைவு விழா!

கம்பத்தாழ்வார் பஜனை மடத்தில் மண்டலாபிஷேக நிறைவு விழா!

விருத்தாசலம்: விருத்தாசலம் கம்பர் தெரு ராதா ருக்மணி சமேத ராதாகிருஷ்ண சுவாமி, கம்பத்தாழ்வார் பஜனை மடத்தில், மண்டலாபிஷேக நிறைவு   விழாவில் ஏராளமானோர் வழிபாடு செய்தனர். மண்டலாபிஷேகம் கடந்த மாதம் 8ம் தேதி துவங்கியது. தினசரி, மாலை 6:00 மணியளவில்,   சுவாமிக்கு திருமஞ்சனம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தது.கடந்த 23ம் தேதி மாலை 6:00 மணிக்கு ராதா ருக்மணி சமேத ராதாகிருஷ்ண   சுவாமி உற்சவமூர்த்தி அருள்பாலித்தார். தொடர்ந்து, யாக சாலை பூஜை துவக்கம், திருமஞ்சனம்  நடந்தன. மண்டல பூஜை நிறைவையொட்டி நேற்று   முன்தினம் காலை 6:00 மணியளவில் அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, கருட வாகனத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !