தாடிக்கொம்பு சவுந்திரராஜா கோயில்தேர் வெள்ளோட்டம்
ADDED :5237 days ago
தாடிக்கொம்பு : திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் தேரின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இக்கோயிலில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய தேர் அமைக்கும் பணி நிறைவடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு முதற்கால யாக பூஜைகள் துவங்கின. நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜையும், 10.30 க்கு கலசப் புறப்பாடும், தொடர்ந்து மாலை 3 மணிக்கு தேர் வெள்ளோட்டமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை இழுத்தனர். அமைச்சர் விசுவநாதன், சண்முகவேல் மில்ஸ் நிர்வாக இயக்குநர் வேலுசாமி கவுண்டர், அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் வேணுகோபால், பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.