உலக நலன் வேண்டி பழநியில் அன்னாபிஷேகம்!
ADDED :3854 days ago
பழநி: உலக நலன் வேண்டி பழநி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் நாளை (ஜூன் 30) முதல் ஜூலை 3 வரை அன்னாபிஷேக விழா நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் பழநிமலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் 4 நாட்கள் தொடர்ந்து உலக நலன் வேண்டி அன்னாபிஷேகம் நடக்கிறது. அதன்படி நாளை மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு வைத்து யாகபூஜையும், பகல் 12 மணி உச்சிக்காலத்தில் மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமிக்கு, சங்காபிஷேகம் செய்தும், மூலவர் சிரசில் அன்னம் கிரீடமாக சூட்டி சிறப்பு அர்ச்சனை நடக்கிறது.