உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேகம்!

மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேகம்!

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் பட்டீஸ்வரம் மற்றும் கொஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்த மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.  கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 26ம் தேதி மாலை 3:00 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடந்தது.  28ம் தேதி காலை 7:30 மணிக்கு கலச  ஸ்தாபனமும், அதனைத் தொடர்ந்து முதல் கால யாக சாலை பூஜை மற்றும் மாலை 6:00 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று  (29ம் தேதி) காலை 6:00 மணிக்கு 2வது கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து, 9:45 மணிக்கு கலசங்கள் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து 10:00  மணிக்கு கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மதுரை வீரன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !