உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே!

உணவும், நிம்மதியான உறக்கமும் வேண்டும், வீண் செலவைத் தவிர்க்க வேண்டும், ஆன்மிக ஈடுபாடு வேண்டும், மறுபிறப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக ஞான சம்பந்தர் நமக்கு அருளிய பதிகம் இது. படிப்போமா பலனடைய!

காதலாகிக் கசிந்து, கண்ணீர் மல்கி,ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது;வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவதுநாதன் நாமம் நமச்சி வாயவே.

நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்,வம்பு நாள்மலர் வார்மது ஒப்பது;செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம்நம்பன் நாமம் நமச்சி வாயவே.

நெக்குள் ஆர்வம் மிகப்பெரு கிந்நினைந்துஅக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவர்தக்க வானவ ராத்தகு விப்பதுநக்கன் நாமம் நமச்சி வாயவே.

இயமன் துõதரும் அஞ்சுவர்; இன்சொலால்நயம் வந்து, ஓத வல்லார்தமை நண்ணினால்நியமம்தான் நினைவார்க்கு இனியான், நெற்றிநயனன், நாமம் நமச்சி வாயவே.

கொல்வாரேனும், குணம் பல நன்மைகள்இல்லாரேனும், இயம்புவர் ஆயிடின்,எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்;நல்லார் நாமம் நமச்சி வாயவே.

மந்தரம் ஆன பாவங்கள் மேவியபந்தனை அவர் தாமும் பகர்வரேல்,சிந்தும் வல்வினை; செல்வமும் மல்குமால்,நந்தி நாமம் நமச்சி வாயவே.

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்,உரைசெய் வாயினர் ஆயின், உருத்திரர்விரவியே புகுவித்திடும் என்பரால்,வரதன் நாமம் நமச்சி வாயவே.

இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்தலம்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்மலங்கி, வாய்மொழி செய்தவன் உய்வகை
நலம்கொள் நாமம் நமச்சி வாயவே.

போதன், போது அன கண்ணனும், அண்ணல்தன்பாதம் தான் முடி நேடிய பண்பராய்;யாதும் காண்பரிது ஆகி, அலந்தவர்ஓதும் நாமம் நமச்சி வாயவே.

கஞ்சி மண்டையர், கையில்உண் கையர்கள்,வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்,விஞ்சை அண்டர்கள் வேண்ட, அமுதுசெய்நஞ்சு உண் கண்டன் நமச்சி வாயவே.

நந்தி நாமம் நமச்சிவாய எனும்சந்தையால், தமிழ் ஞானசம்பந்தன் சொல்சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்பந்த பாசம் அறுக்கவல் லார்களே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !