மந்திர உபதேசங்கள் பெறுதற்குரிய மாத பலன்கள்!
ADDED :3815 days ago
வருடைமதி தனின்மந்தி ராரம்ப மதுசெயின்
வரும்பெரிய துக்கம் இடப
மதியினவ மணியிலா பங்கள்மிகு மிதுனத்தின்
மரணமாம் கடக மதியில்
பெருகும்உற(வு) முறையினர்வி நாசமாம் அரிதனில்
பேசுபயன் அபிவி ருத்தியாம்
பிள்ளைகள் நசிக்கும்பு ரட்டாசி மதிதனில்
பீடுதுலை யிற்சு கமுறும்
மருவுமா ரலின்ஞான மார்கழி தனிற்சுபம்
மகரத்தில் ஞான வீனம்
மாகத்தின் அறிவுதரும் மீனத்தின் வசியமென
மறையாக மத்துரை செய்தாய்
திரிபுரம தெரிபுகுத இளநகை புரிந்திடும்
சின்மய மகா தேவனே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.